திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனிராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் லியோ சகாயராஜ் தலைமை, ஐசக் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரெடெரிக் ஏங்கெல்ஸ், ஜெய ராஜராஜேஸ்வரன் பேசினர்.'2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியம் உட்பட எவ்வித பலனுமின்றி தவிக்கின்றனர். 2016 தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறினர். அதன்படி பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பாளர் ஆக்னெஸ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE