கோவை:கோவையில் இருந்து ஐதராபாத் செல்லும் சிறப்பு சுற்றுலா விமானத்தில் பயணிக்க முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., ரயில்கள் மூலம் மட்டுமின்றி, விமானம் மூலமும் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு அடுத்தாண்டு பிப்., 26ல் விமானம் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.அங்குள்ள கோல்கொண்டா கோட்டை, சார்மினார், மெக்கா மசூதி, சாலர்ஜங் அருங்காட்சியகம், லும்பினி தோட்டம், ராமோஜி சினிமா நகரம் உள்ளிட்ட இடங்களை காணலாம்.
இந்த மூன்று நாள் சுற்றுலாவுக்கு, நபருக்கு,16 ஆயிரத்து,165 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.விபரங்கள், முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., கோவை அலுவலகத்தை, 90031 40655, 82879 31965 ஆகிய எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியையும் தொடர்புகொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE