மதுரை : மதுரையில் சில வாரங்களாக ரூ.100க்கு விற்ற ஒரு கிலோ இஞ்சி மூன்று நாட்களாக ரூ.30 ஆக குறைந்து விலையில் இனிக்கிறது.
மேலும் ஒரு கிலோதக்காளி ரூ.20, கத்தரிக்காய் ரூ.20, முட்டைக்கோஸ் ரூ.15, பீன்ஸ் ரூ.30, கேரட் ரூ.25, சிறிய, பெரிய வெங்காயம் ரூ.30 -55, கறிவேப்பிலை ரூ.25, கொத்தமல்லி ரூ.20, புதினா ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.40 - 50, கருணை ரூ.25, சேணை ரூ.20, சேப்பங்கிழங்கு ரூ.30, அவரை ரூ.40, சிறிய பாகற்காய் ரூ.50, பெரியது ரூ.30, வெண்டை ரூ.20, முருங்கை ரூ.30 - 40, புடலை ரூ.20, சவ்சவ் ரூ.15, நுாக்கல் ரூ.25, டர்னிப் ரூ.30,பட்டர் பீன்ஸ் ரூ.125, சோயா பீன்ஸ் ரூ.90, பச்சை பட்டாணி ரூ.60, கீரை வகைகள்ரூ.15 - 20, தேங்காய் ரூ.20 - 30, முள்ளங்கி ரூ.18, கொத்தரவங்காய் ரூ.15 - 20, காளிபிளவர் ரூ.25,பீர்கங்காய் ரூ30க்கு விற்கிறது.
மழையால் விளைச்சல், வரத்து அதிகரித்ததால் அனைத்து காய்கறி விலை சீராக உள்ளது. விசேஷநாட்கள் வரை இதே விலையில் நீடிக்கும் என மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE