மதுரை : மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகம் காட்டி வருகிறது. இதுவரை 45 பேரை நோய் தாக்கியுள்ளது.
இம்மாவட்டத்தில் அக்., முதல் மார்ச் வரை இக்காய்ச்சல் பரவல் அதிகம் இருக்கும். கடந்த சீசனில் (2018 அக்-2019 மார்ச்) டெங்கு தாண்டவம் தீவிரமாக இருந்தது. இம்முறை அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் டிச.,ல் திடீரென பரவல் வேகம் எடுத்துள்ளது. செப்.,ல் 3, அக்.,ல் 6, நவ.,ல் 14 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தனர். இம்மாதத்தில் இதுவரை மட்டும் நகரில் 11, புறநகரில் 11 என 22 பேரை டெங்கு தாக்கியுள்ளது. டிச., முடிய 10 நாட்களுக்கு மேல் இருப்பதால் பாதிப்பு 50ஐ தாண்டும். ஜன., பிப்., மார்ச் மாதங்களிலும் பாதிப்பு உச்சத்தில் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். டெங்கு பாதிப்பு பகுதிகளில் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவு தான். 2020ல் இதுவரை 256 பேரை டெங்கு பாதித்துள்ளது.புறநகரில் 148, நகரில் 108 பேர் அடக்கம். அதிகபட்சமாக ஜன.,ல் 102, பிப்.,ல் 54, மார்ச்சில் 46, டிச.,ல் 22 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த சீசன் பாதிப்பு 45 ஆகும். புகை மருந்து அடிக்கும் பணி நடக்கிறது. சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE