பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க கல்லுாரிகளுக்கு யோசனை

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஈரோடு:''கல்லுாரிகளில் கொரோனா விதிகளை, முறையாக கடைபிடிக்க வேண்டும்,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின், அகில இந்திய துணைத்தலைவர் ராஜா தெரிவித்தார்.ஈரோட்டில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐ.ஐ.டி., உட்பட சில கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கல்லுாரிகளில் விதிகளை

ஈரோடு:''கல்லுாரிகளில் கொரோனா விதிகளை, முறையாக கடைபிடிக்க வேண்டும்,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின், அகில இந்திய துணைத்தலைவர் ராஜா தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், கல்லுாரி திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐ.ஐ.டி., உட்பட சில கல்லுாரியில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கல்லுாரிகளில் விதிகளை முழு அளவில் கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா பரவலை தடுக்க முடியும். உரிய விதிகளுடன் வகுப்பு நடத்த வேண்டும்.மாணவர், ஆசிரியர்களின் பிற கலந்துரையாடல்களை போன், மெயில் போன்றவற்றில் வைத்து கொண்டால், கொரோனா பரவலை தடுக்கலாம்.

இருப்பினும் கல்லுாரி மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு தொடங்க வேண்டும்.கொரோனா காலத்தில், தமிழகத்தில், 58 டாக்டர்கள் இறந்துள்ளனர். அவர்களை முன்னிலை பணியாளர்களாக கருதி, நிவாரணம் வழங்க கோரினோம். தற்போது, 25 டாக்டர்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது.மற்றவர்களுக்கும் வழங்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை வரவேற்கிறோம். இதனால் மருத்துவ வசதி கிடைக்காத பகுதியில் உள்ளவர்களுக்கு, சேவை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X