கோவை:கோவையில் உயிரிழந்த இலங்கை தாதாவின் கூட்டாளியை கைது செய்வதற்கு, இரு தனிப்படையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, கோவையில், பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் வசித்து வந்தார். இவர் கடந்த ஜூலை 4ம் தேதி, உயிரிழந்த நிலையில் மதுரையில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, பெண் வக்கீல் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில், 'இறந்தது அங்கொட லொக்கா' என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ., பரிசோதனை அவசியமானது. இதற்காக அவரது பெற்றோரிடமிருந்து ரத்த மாதிரிகள், அங்கொட லொக்காவின் கைரேகைகள் ஆகியவற்றை இலங்கையில் இருந்து பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'ரத்த மாதிரி, கைரேகை மாதிரிகளை கோரும் கடிதத்தை, இலங்கை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சகம், துவங்கியுள்ளது.'மாநில அரசின் உள்துறை சார்பில் இவ்வழக்கு குறித்து கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கொட லொக்காவின் கூட்டாளி சனுக்கா தனநாயக்கா இந்தியாவில் பதுங்கியுள்ளார். அவரை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE