கிளப்புறாங்கய்யா...:உலகம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
மழலையின் ஆனந்தம்!தந்தை ஒருவர், தன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வருகிறார். வீட்டுக்கு வந்தபோது, சிறுமி அயர்ந்து துாங்கி கொண்டிருக்கிறாள். அப்போது, அவர் நாய்க்குட்டியை எடுத்து சிறுமியின் அருகில் வைத்துவிட, அதன் சத்தம் கேட்டு சிறுமி அதிர்ச்சியில் கண் திறக்கிறாள். நாய்க்குட்டி தன் மீது விளையாடுவதை கண்டு, மகிழ்ச்சி பூரிப்பில்

மழலையின் ஆனந்தம்!

தந்தை ஒருவர், தன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வருகிறார். வீட்டுக்கு வந்தபோது, சிறுமி அயர்ந்து துாங்கி கொண்டிருக்கிறாள். அப்போது, அவர் நாய்க்குட்டியை எடுத்து சிறுமியின் அருகில் வைத்துவிட, அதன் சத்தம் கேட்டு சிறுமி அதிர்ச்சியில் கண் திறக்கிறாள். நாய்க்குட்டி தன் மீது விளையாடுவதை கண்டு, மகிழ்ச்சி பூரிப்பில் கண்ணீர் விட்டு அழுகிறாள். மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி, வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

போடு 'தகிட தகிட!'

அமெரிக்காவின் மாசூசெட்ஸ் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி வந்தடைந்த முதல் மருத்துவ மனைகளில் போஸ்டன் மெடிக்கல் சென்டரும் ஒன்றாகும். இந்த மெடிக்கல் சென்டரில் உள்ள மருத்துவ பணியாளர்கள், பைசார் நிறுவனத்தின் முதலாவது தடுப்பூசி பார்சல் வந்தவுடன், மகிழ்ச்சியில் ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

குட்டி யானைகளின் குறும்பு!

தென்ஆப்பிரிக்காவின், அட்டோ யானைகள் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது, குட்டி யானை இதமான வெயிலை அனுபவிக்கும் வகையில் தரையில் உருண்டு புரண்டது. அதன் சகோதரி யானை, குட்டியின் காலை பிடித்து இழுத்து விளையாடியது. சிறிது நேரத்தில், மூத்த சகோதரி யானை தரையில் படுத்துக் கொள்ள, குட்டி சகோதரியும் தனது பங்குக்கு அதன்மேல் உருண்டு புரண்டது. சுற்றுலா பயணிகள் எடுத்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆஹா, ஐபோன் அபாரம்!

பிரேசிலின், ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த எர்னஸ்டோ காலியோட்டா என்பவர் தனது நண்பருடன் சிறிய விமானத்தில் சென்று கொண்டிருந்தார். விமானம் 2 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, சிறிய ஜன்னல் வழியாக அவர் இயற்கை காட்சியை தனது ஐபோன் மூலம் பதிவு செய்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஐபோன் தவறி கீழே விழுந்தது. ஜி.பி.எஸ்., உதவியுடன் சிறிது நேரத்திலேயே ஐபோன் கண்டுபிடிக்கப்பட்டது. கடற்கரை மணலில் எந்த சேதமுமின்றி ஐபோன் கிடந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X