புதுடில்லி: மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங். கட்சி கலகலக்க துவங்கியுள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மேற்குவங்கம் வருவதையொட்டி பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபைக்கு, ஆறு மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதில்ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ. பக்கம் தாவ தயாராகி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, மேற்கு வங்கத்துக்கு இன்று வருகிறார். பல்வேறு தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. .
![]()
|
முன்னதாக திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிய சுவேந்து அதிகாரி உட்பட பலரும், பா.ஜ.,வில் சேர உள்ளதாகவும் தகவல்கள்வெளியாகியுள்ளன. நேற்று மேலும் மூன்று திரிணாமுல் காங். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதாக தகவல் வெளியானது. தேர்தலுக்கு ஆறு மாதம் உள்ள நிலையில் , மம்தா பானர்ஜிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE