பெண்களின் வாழ்வில், மிக அழகான நேரம் எது தெரியுமா? ஆமாம், நீங்கள் யூகித்தது சரிதான். அது தாய்மை தான். மாடர்ன் அம்மாக்கள் கர்ப்ப வயிற்றை மறைப்பதில்லை. மாறாக, மகிழ்ச்சியுடன் தங்கள் கர்ப்ப காலத்தை அனுபவிக்கிறார்கள். ஒன்பது மாதம் வரை வேலைக்கும் செல்கிறார்கள். இந்த புதிய தாய்மார்களுக்கான கர்ப்பகால ஆடைகள், சந்தையில் ஏராளமாக உள்ளன.பருத்தி ஆடைகள்கர்ப்பிணிகளுக்கு இலகுவான, பருத்தி ஆடை எதுவுமே சிறந்ததுதான். வெயில் காலத்திற்கு இதமான, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், உடல் வெப்பத்தை தணிக்கலாம். பருத்தியிலான ஆடைகள் உடல் வியர்வையை உறிஞ்சி, குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், கர்ப்பிணிகளின் விருப்ப தேர்வாக இருக்கிறது.மேக்சி டிரஸ்அதிக சவுகரியமான ஆடையான மேக்சி டிரஸ், பணிக்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் கச்சிதமாக இருக்கும். மேக்சி ஆடைகள், இடுப்பு வரை பிட்டாகவும், அதிலிருந்து தரை உரசும்படி, தளர்வாகவும் இருக்கும். புளோரல் பிரிட்ஸ் மற்றும் மென்மையான நிறங்கள் கொண்ட, மேக்சி ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம்.ஸ்கர்ட்ஸ்நீங்களும், உங்கள் உடலும் மூச்சுவிடும் வகையில், ஆடைகள் இருப்பது அவசியம். ஸ்கர்ட்ஸ் இதை பூர்த்தி செய்யும். குறிப்பாக, 'எலாஸ்டிக் வெய்ஸ்ட்' ஆடை, கருவை தாங்கியுள்ள வயிற்றுக்கு, பொருத்தமாக இருக்கும். லுாஸ் டாப்புகளுக்கு, பென்சில் ஸ்கர்ட்ஸ் மற்றும் பிட்டட் டாப்ஸ்க்கு லுாஸ் ஸ்கர்ட்ஸ் அணியலாம். ஷார்ட் குர்தாக்களையும், ஸ்கர்ட்டுடன் மேட்ச் செய்யலாம்.பாலாசோ பேன்ட்ஸ்கர்ப்ப காலத்தில் உடலுடன் இறுக்கமாக இருக்கும் ஜீன்ஸ்கள், லெகின்ஸ்களை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். மாற்றாக, தற்போது டிரெண்டிங்கிலுள்ள பாலாசோ பேன்ட்ஸ் அணியலாம். இவை, நேராக மற்றும் விசாலமாக எளிதாக காற்று புகும் வகையில் இருக்கும். உங்களுக்கு சவுகரியமான குர்தாக்களுடன், மேட்சான பாலாசோ பேன்ட்ஸ் அணியலாம்.அனார்க்கலிபெண்களின் 'ஆல் டைம் பேவரைட்' அனார்க்கலி. உடல்வாகு எப்படி இருந்தாலும், பொருந்தும் வகையில் இருக்கும். இதனால், இந்த ஆடையை நீங்கள் ஒன்பதாம் மாதம் வரையில் அணியலாம்.அலுவலகத்திற்கு, எளிமையான ஆடைகளையும், திருமணம் போன்ற விழாக்களுக்கு கொஞ்சம் கிராண்டாக, உறுத்தாத வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளையும் பயன்படுத்தலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE