கோவை;மக்கும் குப்பை சேகரிக்கும் வாகனங்களின் இயக்கத்தை, அமைச்சர் வேலுமணி நேற்று துவக்கி வைத்தார்.கோவை மாநகராட்சியில், குப்பை உருவாகும் இடத்திலேயே அழிக்கும் வகையில், மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையங்கள் துவக்கப்படுகின்றன.இதற்காக, வீடு வீடாகச் சென்று, மக்கும் குப்பை மட்டும் சேகரிக்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.92.95 லட்சத்தில், 13 வாகனங்கள், துாய்மை இந்தியா திட்டத்தில், ரூ.35.75 லட்சத்தில், 5 வாகனங்கள் வாங்கப்பட்டன.வாகனங்களின் இயக்கத்தை துவங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, குனியமுத்துார் தெற்கு மண்டல அலுவலகத்தில், அவ்வாகனங்களின் இயக்கத்தை, அமைச்சர் வேலுமணி நேற்று துவக்கி வைத்தார்.இதேபோல், கட்டட கழிவுகளை அழிக்க, தற்காலிக தீர்வாக, அரசுக்கு சொந்தமான பயனற்ற கல்குவாரிகளில் கொட்டும் பணியையும், அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கமிஷனர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE