கோவை;அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க., வினர், 83 பேரை போலீசார் கைது செய்தனர். அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் செல்வராஜ், நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை காணவில்லை என்று விமர்சித்து இருந்தார். இதை கண்டித்து, கோவை காந்திபார்க் பகுதியில் தே.மு.தி.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் செல்வராஜ் புகைப்படத்தை கீழே போட்டு மிதித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட முயன்ற, கட்சியின் மாவட்டத் செயலாளர் செந்தில் உட்பட, 83 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE