நம் பாரம்பரிய மண்பானை சமையல் முறையையும், முன்னோர்களின் சமையல் குறிப்பையும் கலந்து, வாடிக்கையாளர்களின் நாவுக்கு அறுசுவை கொடுக்கிறது, ஓட்டல் சிந்தாமணி.கோவை, ரயில்நிலையம் அருகே அமைந்துள்ள சிந்தாமணிக்குள் நுழைந்ததும் பாரம்பரிய முறையில், மண்பானையில் தயாரிக்கப்பட்ட உணவின் சுவை சுண்டி இழுக்கிறது.தலைவாழையில் இனிப்புடன் துவங்குகிறது விருந்து. சிக்கன் மிளகு சூப்புக்கு பின், மண்பானையில் தயாரித்த ராகி களி, இறால் தொக்கு, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி, சிந்தாமணி கொத்து கோழி, நண்டு மசாலா, நல்லி வருவல், குடல் குழம்பு, காடை ரோஸ்ட் என, பல 'ஸ்பெஷல் ஐட்டங்கள்' வரிசைகட்டுகின்றன.காடை ரோஸ்ட், கொத்து கோழியுடன் போட்டி போடுகிறது, நல்லி வருவல். பர்சுக் கேற்ற விலைதான் என்பதால், ஒரு விசிட் அடிக்கலாம்!சிக்கன், மட்டன், இறால், காடை, மீன், கருவாடு என, பல ஐட்டங்களை சுவையாக தயாரித்து தருகிறோம். பாரம்பரிய ராகி களியும், ஈவினிங் நேரங்களில் சீன உணவும் உண்டு. சைவ சாப்பாடு ரூ.95; அசைவ சாப்பாடு ரூ.114. ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்யலாம்.-அர்ஜுன் பார்த்திபன், உரிமையாளர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE