பொது செய்தி

தமிழ்நாடு

21 'மினி கிளினிக்' பயன்பாட்டுக்கு வந்தது

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்புடன், மக்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை வழங்கும் வகையில், மாவட்டத்தில், 21 இடங்களில் 'மினி கிளினிக்' செயல்பாட்டுக்கு வந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 21 மினி கிளினிக் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, நகர்புற சுகாதார மையங்கள், கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.இவற்றுக்கு மாற்றாகவும்,
 21 'மினி கிளினிக்' பயன்பாட்டுக்கு வந்தது

திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்புடன், மக்களுக்கு கூடுதல் மருத்துவ சேவை வழங்கும் வகையில், மாவட்டத்தில், 21 இடங்களில் 'மினி கிளினிக்' செயல்பாட்டுக்கு வந்தது.திருப்பூர் மாவட்டத்தில், 21 மினி கிளினிக் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, நகர்புற சுகாதார மையங்கள், கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.இவற்றுக்கு மாற்றாகவும், குடிசைப்பகுதி, நீண்ட துாரங்களில் உள்ள கிராமப்பகுதி, மலைப்பகுதி, குடிசை மாற்று வாரிய வீடுகள் என, மருத்துவ சேவை தேவைப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு மினி கிளினிக் அமைக்கப்பட்டது. நேற்று முதல் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி; மாலை 04:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும்.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:அவிநாசி ஒன்றியம் - பெரியாயிபாளையம் மற்றும் தெக்கலுார். தாராபுரம் - ப.குமாரபாளையம், மூலனுார் - ஆயிக்கவுண்டன்பாளையம், வெள்ளகோவில் - வேலப்பன்நாயக்கன்வலசு, மடத்துக்குளம் - காரத்தொழுவு, உடுமலை - சின்னவீரம்பட்டி மற்றும் போடிப்பட்டி, பல்லடம் - கணபதிபாளையம், பொங்கலுார் - பெருந்தொழுவு, பொல்லிகாளிபாளையம்.ஊத்துக்குளி - வேலம்பாளையம், திருப்பூர் - பொங்குபாளையம் மற்றும் சொக்கனுார், மாநகராட்சியில் தாசில்சீனிவாசபுரம் மற்றும் பெரியதோட்டம், குடிமங்கலம் - ஆமந்தகடவு, புதுப்பாளையம் மற்றும் தொட்டம்பட்டி, காங்கயம் - சிவன்மலை மற்றும் பழையகோட்டை ஆகிய இடங்களில், மினி கிளினிக் துவக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X