திருப்பூர்:நாளை (20ம் தேதி) முதல் யஷ்வந்பூர் - கண்ணுார் சிறப்பு ரயில் மறுஅறிவிப்பு வரும் வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பதிவு செய்யும் பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வழித்தடத்திலும் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. அவ்வகையில், வரும், 20ம் தேதி முதல் யஷ்வந்பூர் - கண்ணுார் ரயில் இயங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஞாயிறு இரவு, 8:00 மணிக்கு புறப்படும் யஷ்வந்பூர் ரயில் பனஸ்வாடி, ஒசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொர்ணுார், குட்டிபுரம், கோழிக்கோடு, வடகரா, தலைச்சேரி ஸ்டேஷனில் நின்று மறுநாள் காலை, 9:45 மணிக்கு கண்ணுார் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று முதல் துவங்கி நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE