பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருக்க நேரமில்லை! இனி, அட்டவணைப்படி பஸ் இயக்கம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
திருப்பூர்:'நுாறு சதவீதம் பயணியர் பஸ்சில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இனி அட்டவணைப்படி பஸ் இயக்கம் இருக்கும். பயணிக்காக பஸ் ஸ்டாண்டில் பஸ் காத்திருக்காது,' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா ஊரடங்குக்கு பின் செப்., 7 ல் பஸ் இயக்கம் துவங்கியது. படிப்படியாக, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு முன் பஸ்சில், 100 சதவீத பயணியை

திருப்பூர்:'நுாறு சதவீதம் பயணியர் பஸ்சில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இனி அட்டவணைப்படி பஸ் இயக்கம் இருக்கும். பயணிக்காக பஸ் ஸ்டாண்டில் பஸ் காத்திருக்காது,' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா ஊரடங்குக்கு பின் செப்., 7 ல் பஸ் இயக்கம் துவங்கியது. படிப்படியாக, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்கு முன் பஸ்சில், 100 சதவீத பயணியை அழைத்து செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், ஒவ்வொரு மண்டலம், பணிமனைகளில் இருந்து அட்டவணைப்படி பஸ் இயக்க போக்குவரத்து இயக்குனரகம் மேலாண்மை இயக்குனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:காலை, 4:30 மணிக்கு பணிமனை, பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் இயக்கம் துவங்கும். இரவு, 11:30 வரை பஸ் இயக்கப்படும். மார்ச் மாதத்துக்கு முன், எந்தெந்த நேரத்தில் பஸ் இயக்கப்பட்டதோ அதே நேரத்தில் பஸ் ஒவ்வொரு பகுதிக்கு இயங்கும்.கொரோனா கால கட்டத்துக்கு பின் பஸ் இயக்கப்பட்ட போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க, 40 சதவீத பயணியர் மட்டும் பயணிக்க, பஸ் ஸ்டாண்ட்டில் நேர வரையரை பின்பற்றாமல் கூடுதலாக பஸ் நிறுத்தி வைக்கப்பட்டது; தற்போது, இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.இனி, அட்டவணைப்படி பஸ் இயங்கும். நேரத்துக்கு மட்டுமே பஸ் வரும். நீண்ட நேரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் காத்திருந்து பயணிகளை அழைத்து செல்லாது. இதையறிந்து, பயணிகள் திட்டமிட்டு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X