திருப்பூர்:சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் கூட்டமைப்பு தங்கள் எதிர்பார்ப்பை மாதிரி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பெரும் காரணமாக இருக்கும் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருள் இறக்குமதியால் ஏற்படும் அன்னிய செலாவணியை குறைக்க, எத்தனாலை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும். விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இடைத் தரகர் ஆதிக்கம், பதுக்கல் ஆகியன கட்டுப்படுத்த வேண்டும். உணவுப் பங்கீடு திட்டம் முறைப்படுத்தி, அதில் நிலவும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஓட்டுக்குப் பணம் என்ற ஜனநாயக விரோத நடைமுறை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும்.முதியோருக்கு உரிய சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கையை அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE