அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசேஷ நாளில் கோவிலில் அனுமதி; பா.ஜ., கலாச்சார பிரிவு வேண்டுகோள்

Added : டிச 19, 2020
Share
Advertisement
அவிநாசி:'அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், விசேஷ நாட்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்' என, பா.ஜ.,வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, பா.ஜ., வடக்கு மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவர் சீனிவாசன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் லோகநாதனிடம் வழங்கிய மனு:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேருக்கு, தமிழகத்தின், மூன்றாவது பெரிய தேர் மற்றும் கொங்கேழு சிவாலயங்களில்

அவிநாசி:'அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், விசேஷ நாட்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்' என, பா.ஜ.,வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, பா.ஜ., வடக்கு மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவர் சீனிவாசன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் லோகநாதனிடம் வழங்கிய மனு:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேருக்கு, தமிழகத்தின், மூன்றாவது பெரிய தேர் மற்றும் கொங்கேழு சிவாலயங்களில் முக்கியத்துவம் பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனாரால், தேவாரப்பாடல் பெற்ற பெருமையும், இக்கோவிலுக்கு உண்டு.கொரோனா ஊரடங்கு தளர்வில், கோவிலில் தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வு அளிக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனமும் செய்து வருகின்றனர். இருப்பினும், ஹிந்துக்களின் பாரம்பரியமிக்க விசேஷ நாட்களில், எம்பெருமானை தரிசிக்க அனுமதி மறுப்பது, வேதனையளிப்பதாக உள்ளது.ஆனால், மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில், பக்தர்களை அனுமதிக்கின்றனர். எனவே, அடுத்த மாதம், 4ம் தேதி, வைகுண்ட ஏகாதசி மற்றும், 10ம் தேதி, ஆருத்ரா தரிசனம் ஆகிய முக்கிய விசேஷங்களுக்கு, உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றி, பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X