அவிநாசி:தத்தனுார் சுற்றுவட்டார கிராமங்களில், சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு வருகிறது.அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகேயுள்ள தத்தனுார், புஞ்சைதாமரைக்குளம் மற்றும் புலிப்பார் ஊராட்சிகளை உள்ளடக்கி, 'சிப்காட்' தொழில் கூடம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், கலெக்டர், சபாநாயகர் உட்பட பலருக்கும் மனு அளித்துள்ளனர்.இப்போது, 'சிப்காட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, 'சிப்காட் வேண்டாம்; அத்திக்கடவு மட்டும் போதும்' என்ற வாசகம் தாங்கிய சுவொட்டிகளை, கிராமங்கள் உள்ள வீடுகள், பொது இடங்களில் ஒட்டி வருகின்றனர்.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:தத்தனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில், விவசாய நிலம் நிறைந்துள்ளது. தற்போது அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. அத்திட்டம் முழுமை பெற்றால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புண்டு. அதனால் விவசாயம் செழிக்கும். அதேநேரம் தொழில் கூடம் ஏற்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடும். எனவே, இப்பகுதியில் எக்காரணம் கொண்டும் தொழில் கூடம் அமைக்க கூடாது. இவ்வாறு,அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE