சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி துாக்கில் தற்கொலை

Added : டிச 19, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததால், மாணவி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.வெள்ளகோவில், இந்திரா நகரை சேர்ந்தவர் கதிர்வேல். நெடுஞ்சாலைத்துறையில் டிரைவர். இவருக்கு, 18 மற்றும் 15 வயதில் இரு மகள் உள்ளனர்.இரண்டாவது மகள், மூலனுாரிலுள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, அருகே வசித்து வரும், கந்தசாமி மகன் நந்தகுமார், 22, என்பவர்,
 காதலிக்க வற்புறுத்தியதால்  மாணவி துாக்கில் தற்கொலை

வெள்ளகோவில்:காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததால், மாணவி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.வெள்ளகோவில், இந்திரா நகரை சேர்ந்தவர் கதிர்வேல். நெடுஞ்சாலைத்துறையில் டிரைவர். இவருக்கு, 18 மற்றும் 15 வயதில் இரு மகள் உள்ளனர்.இரண்டாவது மகள், மூலனுாரிலுள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு, அருகே வசித்து வரும், கந்தசாமி மகன் நந்தகுமார், 22, என்பவர், காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
கடந்த நவ., மாதம், காங்கயம் அனைத்து மகளிர் போலீசில், கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், போலீசார் நந்தகுமாரை எச்சரித்து அனுப்பினர்.இருப்பினும், தொடர்ந்து மாணவியிடம், தன்னை காதலிக்க வற்புறுத்தினார். இதனால், மனமுடைந்த மாணவி, நேற்று தனது வீட்டில், துப்பட்டாவால், துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், நந்தகுமாரை, காங்கயம் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X