பஸ் வசதி இல்லாமல், மக்கள் அவதி :சரக்கு வேனில், ஆபத்தான பயணம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
பல்லடம்;பஸ் வசதி இல்லாததால், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், விவசாயம், விசைத்தறி, கறிக்கோழி உட்பட பல்வேறு தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன. பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மற்றும் தொழில், வியாபார ரீதியாக பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, கிராம மக்கள் பலரும் அரசு பஸ்களை நம்பியே
 பஸ் வசதி இல்லாமல், மக்கள் அவதி :சரக்கு வேனில், ஆபத்தான பயணம்

பல்லடம்;பஸ் வசதி இல்லாததால், பல்லடம் வட்டாரத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பல்லடம் வட்டாரத்தில், விவசாயம், விசைத்தறி, கறிக்கோழி உட்பட பல்வேறு தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன. பனியன் கம்பெனி தொழிலாளர்கள், மற்றும் தொழில், வியாபார ரீதியாக பல ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.குறிப்பாக, கிராம மக்கள் பலரும் அரசு பஸ்களை நம்பியே உள்ளனர். ஆனால், கொரோனா பாதிப்புக்கு பின், பஸ் போக்குவரத்து முழுவதும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், கிராமங்களில் மக்கள் பலரும் அவதிப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:திருப்பூர் பனியன் தொழில் சார்ந்து எண்ணற்ற தொழிலாளர்கள், கிராம பகுதிகளில் இருந்துதான் செல்கிறோம். விவசாயிகள், வியாபாரிகள் தினமும் நகர பகுதிகளுக்கு சென்று வர அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், பல்லடம் வட்டாரத்தில் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.இதனால், சரக்கு வாகனங்களில் அதிக பணம் செலவழித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறைந்த சம்பளம், மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இது வருவாய் இழப்பை ஏற்படுத்தும். எனவே, கிராம பகுதிகளுக்கு முன்பு போல் பஸ்களை இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X