திருப்பூர்;இன்று முதல் திறந்த வெளி விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் குழு, கொரோனா ஊரடங்கு காரணமாக திறந்தவெளியில் விளையாட்டு போட்டி நடத்த அரசு தடைவிதித்திருந்தது. சீரான இடைவெளியில் இரு மாதமாக, பல்வேறு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த மாதம், உள்அரங்கு விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.கிரிக்கெட், பேட்மின்டன் கிளப் திறக்கப்பட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று முதல் திறந்தவெளியின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம், 50 சதவீதத்துக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொதுவாக, பால்பேட்மின்டன், டென்னிஸ், கேரம், சதுரங்கம் உள்அரங்கு விளையாட்டாகவும், வாலிபால், கூடைப்பந்து, கபடி, கோ - கோ, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், தடகளம் திறந்த வெளி போட்டியாகவும் நடத்தப்படுகிறது. இன்று முதல் வெளிஅரங்கு போட்டிக்கு அனுமதி அளித்ததன் மூலம் வரும் நாட்களில் இனி குழு, தனிநபர் விளையாட்டு போட்டிகள் நடக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE