பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டு(ம்) வருமா? இடம் மாறிய பாரம்பரிய மாட்டுச்சந்தை

Added : டிச 19, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சியின் அடையாளமாக கருதப்பட்ட, மாட்டு சந்தை தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்காத சிலர் மட்டும் சந்தைக்கு மாடுகளை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே, 10 ஏக்கர் பரப்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுச்சந்தை செயல்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுவது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியின் அடையாளமாக கருதப்பட்ட, மாட்டு சந்தை தற்போது பொலிவு இழந்து காணப்படுகிறது. பாரம்பரியத்தை மறக்காத சிலர் மட்டும் சந்தைக்கு மாடுகளை கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே, 10 ஏக்கர் பரப்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுச்சந்தை செயல்பட்டது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம்.வெளிமாநிலங்கள்; வெளி மாவட்டங்களிலிருந்து பல்வேறு ரக மாடுகள், விற்பனைக்கு கொண்டு வரப்படும். செவ்வாய் கிழமையில், நான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில் இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.வாரந்தோறும், இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. நகராட்சிக்கு மாதத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.இந்நிலையில், மாட்டு சந்தை செயல்பட்டு வந்த இடத்தில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அருகே உள்ள காலியிடத்தில், மாட்டு சந்தை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதித்தது.தனியார் வசம்இந்நிலையில், சந்தையில் போதுமான வசதிகள் இல்லை என கூறி, மாடு வியாபாரிகள் திப்பம்பட்டியில் தனியார் இடத்தில் புதிதாக, மாட்டுச்சந்தை துவங்கினர்.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், 15 லட்சம் ரூபாய் செலவில் மாடுகளுக்கு தண்ணீர் வழங்கும் தொட்டிகள், தெருவிளக்குகள் மற்றும் மாடுகள் நிறுத்தப்பகுதிகள் கற்களை கொண்டு தளம் அமைக்கப்பட்டது. போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின், மாட்டு சந்தை மீண்டும் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தை மீண்டும் செயல்படவில்லை.திறந்தவெளி 'பார்'மாட்டு சந்தை செயல்படாததால், தற்போது அந்த இடம், திறந்த வெளி, 'பார்'ஆகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. சந்தையில், 24 மணி நேரமும், 'குடி'மகன்கள் அருகே உள்ள மதுக் கடையில் இருந்து மதுபானங்கள் வாங்கி வந்து, திறந்தவெளியில் அமர்ந்து குடிக்கின்றனர்.கஞ்சா புகைப்பது, மதுபானம் குடிப்பது என சமூக விரோத செயல்களின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால், பொள்ளாச்சியின் அடையாளமாக இருந்த மாட்டு சந்தை தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.பாரம்பரியம் திரும்புமா?மாட்டு சந்தையில், பாரம்பரியத்தை மறக்காத சிலர் மட்டும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக உள்ளது. பாரம்பரியமிக்க சந்தை நிலை கண்டு வருந்திச் செல்கின்றனர்.நகராட்சி நுாற்றாண்டு விழா கொண்டாடும் நிலையில், பொள்ளாச்சியின் அடையாளத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேம்படுத்தப்படும்நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில், ''நகராட்சி மாட்டு சந்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாட்டு சந்தை பராமரிக்கும் வகையில், இரண்டு பக்கமும் கேட் அமைத்து, 'குடி'மகன்கள் உள்ளே வராமல் இருக்க நட வடிக்கை எடுக்கப்படும். '' இதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் சந்தை செயல்பட்டால் தேவையான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X