சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நல்லது செஞ்சாலும், ஏதாவது சில்மிஷத்துல சிக்கிட்டாலும், சமூக வலைதளங்களில் 'மீம்' புரட்சியே நடக்கிறது. அந்தளவுக்கு, 'மீம்'களால், இளைஞர்கள் கவரப்பட்டுள்ளனர்.ஒரு நாளைக்கு ஒரு 'டைம்' ஆவது, 'மீம்' என்ற வார்த்தைய காதுல கேட்காம, பார்க்காம இருப்பதில்லை. அந்த அளவுக்கு, நெட்டிசன்கள் எது நடந்தாலும், 'மீம்' போட்டு 'டிரெண்ட்' ஆக்கிவிடுகின்றனர்.'பேஸ்புக்', 'இன்ஸ்டாகிராம்'ல, 'பேஜ் கிரியேட்' செய்து, 'மீம்' வாயிலா பல கருத்துக்கள் பரப்புறாங்க. சூழல் பாதுகாப்பு, நகைச்சுவை, அரசியல் மற்றும் சினிமா விமர்சனம்னு எல்லா விஷயத்துக்கும் 'பேஜ்' இருக்கு.அந்த வகையில், 'மீம்' வாயிலா போலீசாரோட செயல்பாடுகள், மக்களுக்கு நல்ல கருத்துக்கள சொல்லி அறிவுரை வழங்க, 'சோசியல் மீடியா'வுல களமிறங்கியிருக்காங்க, கோவை மாவட்ட போலீசார்.இதுக்காக, 'மீடியோ செல்'னு தனியான ஒரு பிரிவ உருவாக்கி, 'கோயம்புத்துார் டிஸ்டிரிக்ட் போலீஸ்'னு பெயர் வெச்சு 'பேஜ்' கிரியேட் செய்து, இளம் போலீசார பணியமர்த்தியிருக்காங்க.இந்த 'டீம்'ல இருக்கறவங்க கற்பனைக்கும், திறமைக்கும், நெட்டிசன்களால கூட போட்டி போட முடியாத அளவுக்கு, தினமும் 'கிரியேட்டிவ் மீம்' போட்டு கலக்குறாங்க.'கல்வி கற்கும் வயதில, கல்லுடைக்க போகலாமா?, உறவுகளுக்கு உயிர் அவசியம்; உனக்கு ஏன் இவ்ளோ அவசரம், தேரில் சென்றாலும், நுாறில் சென்றால் கிடப்பது என்னவோ தெருவில் தான், கோடி ரூபாய் பரிசுனு வர்ற 'லிங்க்' தொட்டா, கடைசில தெருக்கோடி தான்...'இப்படி பல வாசகங்கள் வெச்சு, அழகான 'கார்டூன்' படங்கள பயன்படுத்தி 'மீம்' போடுறாங்க. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, விபத்து, மழைக்கால முன்னெச்சரிக்கை, கொரோனாவுல இருந்து பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர்கள், 'குட் டச், பேட் டச்', அதிவேகத்துல் பறக்கற 'ரோமியோ'க்களுக்கு 'அட்வைஸ்' பண்ணுறாங்க.இவங்க வெளியிடாத தகவல்களே இல்ல. அதுமட்டுமில்லாம, 'போக்சோ' கைது, சூதாட்ட வழக்கு, திருட்டு கும்பல் கைது, போலீசாரின் சாதனைகள் பற்றியும், இரவு ரோந்து செல்வோரின் எண்களும் வெளியிடுறாங்க.ஒரு நாளைக்கு மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட, 'மீம்' போட்டு மக்களுக்கு 'அட்வைஸ்' பண்ணுறாங்க. கோவை மாவட்ட காவல்துறையோட, 'மீடியா செல்' வெளியிடுற 'மீம்'க்கு தனியா 'பேன்ஸ்' கூட்டமே இருக்கு. வித்தியாசமான முறையில வெளியிடப்படுற 'மீம்', வீடியோக்களுக்கு, மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.போலீஸ் பத்தி சமூகத்துல ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், மக்கள் நலனுக்காக, அதிதீவிரமா 'அட்வைஸ்' பண்ற கோவை மாவட்ட போலீசின் இந்த முயற்சிக்கு, 'வெரி குட்', 'வேற லெவல்'னு சொல்லியே ஆகணும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE