பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர்கள் ஓகே; அதிகாரிகள் கையில் முடிவு! 70 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

Added : டிச 19, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புரவிபாளையம் ஊராட்சியில் இருக்கும், ஒரு தெருவை கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனுார் ஊராட்சியுடன் இணைக்க, இரு ஊராட்சி தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், மக்களின், 70 ஆண்டு கால பிரச்னை தீர்வு கிடைக்கும்.பொள்ளாச்சி வடக்கு - கிணத்துக்கடவு ஒன்றியங்களின் எல்லை கிராமம் முத்துக்கவுண்டனுார்.

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் புரவிபாளையம் ஊராட்சியில் இருக்கும், ஒரு தெருவை கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனுார் ஊராட்சியுடன் இணைக்க, இரு ஊராட்சி தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், மக்களின், 70 ஆண்டு கால பிரச்னை தீர்வு கிடைக்கும்.பொள்ளாச்சி வடக்கு - கிணத்துக்கடவு ஒன்றியங்களின் எல்லை கிராமம் முத்துக்கவுண்டனுார். சொக்கனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, 9 கிராமங்களில் இக்கிராமம் ஒன்று. கிராமத்தின் தெற்கு வீதி, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், புரவிபாளையம் ஊராட்சியின், 10 வார்டாக உள்ளது.குடிநீர், தெருவிளக்கு வசதிகள் புரவிபாளையம் ஊராட்சியில் இருந்தே பராமரிக்கப்படுகிறது. வீட்டுவரி செலுத்துதல், உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஓய்வூதியம் பெறவும், மூன்று கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய பரிதாபம் நீடிக்கிறது.மக்கள் அதிருப்திநீண்ட போராட்டத்துக்கு பின், கடந்த, 15 ஆண்டுகளாக முத்துக்கவுண்டனுாரில் இப்பகுதி மக்கள் ரேஷன் பொருள்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் அனைத்தும் முத்துக்கவுண்டனுார் கிராமத்தில் இருந்தாலும், அடிப்படை தேவைகள் அனைத்துக்கும், ஐந்து கி.மீ., துாரத்தில் உள்ள புரவிபாளையம் ஊராட்சியை நம்பியிருக்க வேண்டியுள்ளது.இப்பகுதி மக்கள், கடந்த 70 ஆண்டுகளாக, தங்கள் குடியிருப்பு பகுதியை, முத்துக்கவுண்டனுார் கிராமத்துடன் இணைத்து, கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என, தாசில்தார், சப்-கலெக்டர், கலெக்டர், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களிடம் வலியுறுத்தியும், இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மக்கள் விருப்பம்சொக்கனுார் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ''தேர்தல் நேரத்தில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள், வெற்றி பெற்று நன்றி சொல்ல வரும் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களிடம் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பிரச்னையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. மக்கள் விரும்புவது போன்று, புரவிபாளையம் ஊராட்சியின், 10வது வார்டின் தொடர்ச்சியை, சொக்கனுார் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்,'' என்றார்.புரவிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேந்திரன் கூறுகையில், ''மக்களின் சிரமத்தை போக்க, பல முறை அரசுக்கும், வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சொக்கனுார் ஊராட்சியுடன் இணைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அதற்காக, ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றி தருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X