பொது செய்தி

தமிழ்நாடு

'குட்டீஸ்'கள கட்டிப்போடும் 'பல்லாங்குழி' விளையாட்டு

Added : டிச 19, 2020
Share
Advertisement
பொது முடக்க காலத்தில், 'குட்டீஸ்'களை வீட்டில் வைத்து சமாளிக்க, திணறியவர்களுக்கு, கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது, பாரம்பரிய விளையாட்டுகள் தான். பெரியவர்களுக்கும், மன ஆறுதல் அளித்த அந்த விளையாட்டுகளை காலப்போக்கில், நாம் தொலைத்து, மறந்திருந்தோம்.ஆனால், கொரோனா தொற்று பரவல், ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்களால், பாரம்பரிய விளையாட்டுகள் மீண்டும், புது உற்சாகத்தோடு நம்

பொது முடக்க காலத்தில், 'குட்டீஸ்'களை வீட்டில் வைத்து சமாளிக்க, திணறியவர்களுக்கு, கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது, பாரம்பரிய விளையாட்டுகள் தான். பெரியவர்களுக்கும், மன ஆறுதல் அளித்த அந்த விளையாட்டுகளை காலப்போக்கில், நாம் தொலைத்து, மறந்திருந்தோம்.ஆனால், கொரோனா தொற்று பரவல், ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்களால், பாரம்பரிய விளையாட்டுகள் மீண்டும், புது உற்சாகத்தோடு நம் வீடுகளில், உள்ளே நுழைந்து, அனைவரின் மனங்களிலும், பசுமரத்தாணியாக பதிந்துள்ளது. அவ்வகையில், வீட்டு பரண்களில், அதிகம் தேடப்பட்டது, பல்லாங்குழி பலகைகளே ஆகும்.வீடுதோறும், பல்வேறு வடிவங்களில், தவறாமல், இடம் பிடித்திருந்த பல்லாங்குழி பலகைகள் காலப்போக்கில், பரணில், முடங்கியிருந்தன. இத்தகைய பலகைகளில், இருபுறமும் தலா, 7 குழிகள் அமைக்கப்பட்டிருக்கும்.மீன் வடிவத்திலும், பல்வேறு கைவண்ணங்களோடு, பல்லாங்குழி பலகைகள் வடிவமைக்கப்பட்டு, அதன் பழமை குறித்து, முதியோர் பெருமைப்பட பேசுவதை கிராமங்களில், காணலாம்.பல்லாங்குழி பலகை குழிகளை, புளியங்கொட்டையால், நிரப்பி, ஆட்டத்தை துவக்குகிறார்கள். விளையாடும் போது, மனதுக்குள், கணக்கு போட்டு, குழிகளை காலி செய்தால், மட்டுமே, ஆட்டத்தில், வெற்றி பெற முடியும்.பொறுமையாக, மனத்தை ஒருமுகப்படுத்தி, கைகளுக்கும் பயிற்சி கிடைக்கும் இந்த விளையாட்டு, பெண் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மொபைல்போன்களில் மூழ்கிய குழந்தைகளை, சற்று திசைதிருப்ப, பயன்பட்ட, இந்த விளையாட்டு, தற்போதைய தலைமுறையினருக்கு, ஆச்சரியத்தையும் அளித்தது.இதே போல், ஆடுபுலி ஆட்டம், தாயம் என பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்ட, அதற்கு தேவையான பொருட்கள் விற்பனையும் துாள் பறந்தது. கணிதம், மனதை ஒருமுகப்படுத்துதல், உடற்பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்த பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், வீட்டில், இருக்கும் குட்டீஸ்களை எளிதாக சமாளித்து, அவர்களின், அறிவுத்திறனை வளர்ப்பதும் எளிதாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X