பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, டாஸ்மாக் கடையில், 'சரக்கு' திருட்டை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.மக்கள் அதிகம் கூடும் இடங்கள், திருட்டு, குற்றச்சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடிக்கவும் கண்காணிப்பு கேமரா அமைப்பது வழக்கம்.பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற முக்கிய பகுதிகளிலேயே, கண்காணிப்பு கேமரா வசதி இன்னும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.இந்நிலையில், டாஸ்மாக் கடை ஒன்றில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளனர். நடுப்புணி ரோடு புரவிபாளையம் தேவம்பாடி பிரிவை அடுத்து, டாஸ்மாக் கடை ஒன்று ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.இந்த கடையின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில், இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீப காலமாக, பூட்டிய டாஸ்மாக் கடைகளை உடைத்து மது வகைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. அப்படி நடக்கும் போது, சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் நடைமுறை உள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கவும், மது போதை ஆசாமிகள் தகராறில் ஈடுபடுவதை தவிர்க்கவும் டாஸ்மாக் ஊழியர்களே, சொந்த செலவில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE