பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய சாகுபடிக்கு நடவு தீவிரம்: நாற்று விலை அதிகரிப்பால் கவலை

Added : டிச 19, 2020
Share
Advertisement
உடுமலை:பருவமழைக்குப்பிறகு, சின்னவெங்காய சாகுபடிக்கான நடவுப்பணிகள் உடுமலை பகுதியில், தீவிரமடைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இதில், தண்ணீர் தேவை அதிகமுள்ள, சாகுபடி செலவு அதிகம் பிடிக்கும் சின்னவெங்காய சாகுபடி இரு சீசன்களில், மட்டும் நடவு செய்யப்படுகிறது.நடப்பாண்டு,
 வெங்காய சாகுபடிக்கு நடவு தீவிரம்: நாற்று விலை அதிகரிப்பால் கவலை

உடுமலை:பருவமழைக்குப்பிறகு, சின்னவெங்காய சாகுபடிக்கான நடவுப்பணிகள் உடுமலை பகுதியில், தீவிரமடைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பல்வேறு காய்கறி சாகுபடி ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இதில், தண்ணீர் தேவை அதிகமுள்ள, சாகுபடி செலவு அதிகம் பிடிக்கும் சின்னவெங்காய சாகுபடி இரு சீசன்களில், மட்டும் நடவு செய்யப்படுகிறது.நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, விவசாயிகள், சின்னவெங்காய சாகுபடியில், ஈடுபட ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். உடுமலை பகுதியில், விதைகளை நேரடியாக நடவு செய்வதை தவிர்த்து, நாற்று வெங்காயம் நடவு செய்யும் முறையே அதிகம் பின்பற்றப்படுகிறது.தற்போது, ஒரு பாத்தி அளவிலான நாற்றுகள், 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல்லடம், செஞ்சேரிப்புத்துார் உட்பட பகுதிகளில் இருந்து நாற்றுகளை வாங்கி வந்து, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார் உட்பட பகுதிகளில், நடவு செய்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'நடவு சீசனில், சின்னவெங்காய விதை மற்றும் நாற்றுகள் விலை, பல மடங்கு அதிகரித்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், சீசன் சமயத்தில், தரமான விதை, இடுபொருட்கள் வினியோகித்தால், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X