உடுமலை:கேந்திரிய சைனிக் போர்டில், கல்வி நிதியுதவி பெற விண்ணப்பம் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கேந்திரிய சைனிக் போர்டில், முன்னாள் படைவீரர்களின் மகள்கள் திருமணம், விதவை மறுமணத்துக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக, கேந்திரிய சைனிக் போர்டில் நிதியுதவி வேண்டி விண்ணப்பம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.எனவே, நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி நிதியுதவி பெற முன்னாள் படைவீரர்கள், அவர்கள் சார்ந்தோர் டிச., 30ம் தேதி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரம் அறிய, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அல்லது 0421 - 2971127 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE