பொது செய்தி

தமிழ்நாடு

பயணியர் ரயில்கள் இயக்கம் எப்போது? களை இழந்தது ஸ்டேஷன் வளாகம்

Added : டிச 19, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி வழித்தடத்தில் பயணியர் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் கூட்டம் இன்றி, களையிழந்து காணப்படுகிறது.பொள்ளாச்சி வழித்தடத்தில், சென்னை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், பொள்ளாச்சி - கோவை; மதுரை - கோவை; பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயில்கள் இயங்கி வந்தன.கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. பிற
 பயணியர் ரயில்கள் இயக்கம் எப்போது? களை இழந்தது ஸ்டேஷன் வளாகம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வழித்தடத்தில் பயணியர் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால், ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் கூட்டம் இன்றி, களையிழந்து காணப்படுகிறது.பொள்ளாச்சி வழித்தடத்தில், சென்னை, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்களுடன், பொள்ளாச்சி - கோவை; மதுரை - கோவை; பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயில்கள் இயங்கி வந்தன.கொரோனா ஊரடங்கின் போது, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. பிற வழித்தடங்களில் ரயில் இயக்கம் துவங்கிய பிறகும், பொள்ளாச்சி வழியில் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன.ரயில்களை இயக்க வலியுறுத்தி, பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு எம்.பி.,கள், பயணியர் நல அமைப்புகள், பொதுநல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதையடுத்து, சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. அமிர்தா எக்ஸ்பிரஸ் இயங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், பயணியர் ரயில் இயக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. பொள்ளாச்சியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கோவைக்கு பணி நிமித்தம் சென்று வருகின்றனர்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்களுக்கு, ரயில் சிக்கனமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தாக இருந்தது.பயணியர் ரயில்கள் இயங்காததால், அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதிக கட்டணம் கொடுத்து, பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.வழக்கமாக, நுாற்றுக்கணக்கான பயணிகள் கூட்டத்துடன் கலகலப்பாக காணப்படும் ரயில்வே ஸ்டேஷன், பயணியர் ரயில் இயக்கம் இல்லாததால், ஆள் அரவமின்றி களையிழந்து காணப்படுகிறது.கோவை ரயிலில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர். அதில், 600க்கும் மேற்பட்டவர்கள் சீசன் டிக்கெட் எடுத்து, ரயில்வேயின் வருவாயை உறுதிப்படுத்தினர்.மதுரை, திருச்செந்துார் ரயில்களும் நல்ல பயணிகள் கூட்டத்துடன் இயங்கின. அந்த வருவாயை ரயில்வே நிர்வாகமும் இழந்துள்ளது. எனவே, பயணியர் ரயில் போக்குவரத்தை உடனே துவங்க வேண்டும், என, ரயில்வே ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X