பொள்ளாச்சி;பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், தேவம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிக்கவுண்டன்புதுார் கிராமத்தில், 22 ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, 50 கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன.தற்போது, 25க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை வலுவிழந்து காணப்படுகின்றன. மேற்கூரையின் கீழ் பகுதி பெயர்ந்து விழுகின்றன. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால், மழைக்காலத்தில், நீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுகிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வீட்டு மேற்கூரை ஈரமாகி, சிறு பகுதி பெயர்ந்து விழுந்தது. இதில், வீட்டினுள் பெற்றோருடன் துாங்கிக்கொண்டிருந்த, ஒன்றரை வயது சிறுவன் காயமடைந்தான்.இதை தொடர்ந்து, வலுவிழந்த மேற்கூரை கொண்ட வீடுகளில் இருப்பவர்கள், இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே துாங்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டனர். மோசமசான நிலையில் உள்ள வீடுகளை, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE