பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 88 பள்ளி செல்லா குழந்தைகள்

Added : டிச 19, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், 88 பள்ளி செல்லா குழந்தைகளும்; 305 மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கண்டறியப்பட்டனர்.பொள்ளாச்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட, 141 குடியிருப்பு பகுதிகளிலும்; வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 112 குடியிருப்புகளிலும் இந்த பணிகள் நவ., 25 முதல், டிச., 15ம் தேதி வரை நடந்தது.வடக்கு ஒன்றியத்தில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், 88 பள்ளி செல்லா குழந்தைகளும்; 305 மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கண்டறியப்பட்டனர்.பொள்ளாச்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட, 141 குடியிருப்பு பகுதிகளிலும்; வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 112 குடியிருப்புகளிலும் இந்த பணிகள் நவ., 25 முதல், டிச., 15ம் தேதி வரை நடந்தது.வடக்கு ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், பீகார் மாநில குழந்தைகள் 15 பேர் உட்பட, பள்ளி செல்லா குழந்தைகள் 43 பேர்; மாற்றுத்திறனாளி குழந்தைகள், 260 பேர் கண்டறியப்பட்டனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், பள்ளி செல்லா குழந்தைகள், 45 பேர்; மாற்றுத்திறனாளி குழந்தைகள் புதியதாக,45 பேர் கண்டறியப்பட்டனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகளுக்கு, இணைப்பு மையம் விரைவில் துவங்கப்படும். அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும்வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X