குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பூங்காவில் படகு சவாரி இயக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு, கடந்த செப்., மாதம் திறக்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு அதிகரித்து வருகிறது.பூங்கா ஏரி பூட்டப்பட்டு, படகு சவாரி இல்லாததால், படகு இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகு சவாரி இல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். படகுகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. படகுகளை சீரமைத்து படகு சவாரி விட சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE