கூடலுார்;கூடலுார்- சிங்காரா மின் வழிதடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் மாற்றும் பணி நிறைவு பெற்றதால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.கூடலுார், உப்பட்டி, சேரம்பாடி துணை மின் நிலையங்களுக்கு, சிங்காரா மின் நிலையத்திலிருந்து 'மின்சப்ளை' வழங்கப்படுகிறது. இதற்காக, இவ்வழிதடத்தில் ஆங்கிலேயர் காலத்தில்,137 டவர்கள் அமைத்துள்ளன. வழிதடத்தில் உள்ள பழமையான மின் கம்பிகள் அடிக்கடி சேதமடைந்து மின் சப்ளை பாதிக்கபட்டது.இதற்கு தீர்வாக, புதிய மின் கம்பிகள் மாற்றுவதற்காக, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்கான பணிகள், கடந்த ஆண்டு துவங்கி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் பணிகள் நிறுத்தபட்டது.அரசின் தளர்வுகளை தொடர்ந்து, கடந்த மாதம், 20ம் தேதி மீண்டும் பணிகள் துவங்கி, நேற்று, முன்தினம் நிறைவு பெற்றது. மின் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.மின் துறை அதிகாரிகள் கூறுகையில்,'இவ் வழித்தடத்தில் மிகவும் பழமையான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றப்பட்டு உள்ளதால், இனி, இவ்வழித்தடத்தில் மின்சப்ளை தடை இருக்காது,' என்றனர்.கூடலுார் மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் பழமையானவை. இதனால், மழை காலத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. தற்போது, இதனை மாற்றியதால், கம்பிகளும் அறுந்து விழ வாய்ப்பில்லை. இந்த கம்பிகளை மின்வாரியம் பராமரிக்க வேண்டும். அடிக்கடி மின் தடை வராமல் பார்த்து கொள்ள வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE