பொது செய்தி

இந்தியா

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் மார்க்., கம்யூ., ஆட்சி என, அந்தக் கடவுள் நினைத்து விட்டாரோ...

Updated : டிச 19, 2020 | Added : டிச 19, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
கேரளாவை, 'கடவுளின் பூமி' என்பர். பா.ஜ., வினர் அங்கே படுதோல்விஅடைந்துள்ளனர். கடவுள் பெயரை அரசியலுக்கு பயன்படுத்துவது அந்தப் பூமிக்கே பிடிக்கவில்லையே; தமிழகத்தில் மட்டும் இவர்களின் பாச்சா பலிக்குமா என்ன?- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன்'அந்தக் கடவுளின் பூமியில், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் மார்க்சிஸ்ட் ஆட்சி என, அந்தக் கடவுள் நினைத்து
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் மார்க்., கம்யூ., ஆட்சி என, அந்தக் கடவுள் நினைத்து விட்டாரோ...

கேரளாவை, 'கடவுளின் பூமி' என்பர். பா.ஜ., வினர் அங்கே படுதோல்விஅடைந்துள்ளனர். கடவுள் பெயரை அரசியலுக்கு பயன்படுத்துவது அந்தப் பூமிக்கே பிடிக்கவில்லையே; தமிழகத்தில் மட்டும் இவர்களின் பாச்சா பலிக்குமா என்ன?
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன்


'அந்தக் கடவுளின் பூமியில், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தான் மார்க்சிஸ்ட் ஆட்சி என, அந்தக் கடவுள் நினைத்து விட்டாரோ...' என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன் அறிக்கை.



'பிரசாரம் செய்வதற்கு அரசு தடை ஏற்படுத்துகிறது; அனுமதி மறுக்கப்படுகிறது' என, நடிகர் கமல் தெரிவித்துள்ளார். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். அதை மீறும் போது, அரசு நடவடிக்கை எடுக்கும்.
- அமைச்சர் பாஸ்கரன்


'எல்லாரையும் விட முதலில் பிரசாரம் செய்தால், முதலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என, தவறாக கமல் நினைத்து விட்டாரோ...' என, எண்ணத் தோன்றும் வகையில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாஸ்கரன் பேட்டி.



உலகத்திலேயே, வேறெங்கும் நிகழாத கொடுமையாக, ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை, ஊதியத்தை குறைத்து, ஹிட்லரை விட மோசமானவராக, முதல்வர் இ.பி.எஸ்., நடந்துக் கொண்டிருக்கிறார். அரசு உதவிப் பொறியாளர்களை, தன் வழக்கமான பாணியில், நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


latest tamil news




'கூடுதல் சம்பளம் கேட்பவர்களுக்கு, இப்படித் தான் செய்ய வேண்டும் என, இ.பி.எஸ்.,சுக்கு தவறாக அறிவுரை வழங்கி விட்டனரோ...' என, சந்தேகம் கிளப்பும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.



எல்லாக் கட்சியிலும் மகளிர் அணி இருந்தாலும், பா.ஜ.,வில் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பும், மரியாதையும் உள்ளது. அதனால் தான், பா.ஜ., மகளிர் அணிக்கு அதிக பெண்கள் வருகின்றனர். பிப்., முதல் வாரத்தில் ராமநாதபுரம் நகரில், பா.ஜ., மாநில மகளிர் மாநாடு நடத்த உள்ளோம்.
- பா.ஜ., மாநில மகளிர் அணி பொதுச் செயலர் நெல்லையம்மாள்


'புதுக் கருத்தாக இருக்கிறதே...' என, புகழத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில மகளிர் அணி பொதுச் செயலர் நெல்லையம்மாள் பேட்டி.



புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காக, தமிழக அரசும், தமிழக முதல்வரும் இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அ.தி.மு.க., வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓட்டளித்து இருந்தால், விவசாயிகள் இப்படி வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டிருக்காது.
- அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின், தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்


'அ.தி.மு.க., ஓட்டளிக்காமல் இருந்தாலும், வேறு ஒரு விவகாரத்தை எழுப்பி, இப்படி நடுரோட்டிற்கு வந்து போராடத்தான் செய்வீர்கள்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின், தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202004:29:25 IST Report Abuse
J.V. Iyer நல்லது செய்வதற்கு இந்திய விவசாயிகளிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? நல்லகதையாக இருக்கிறதே? பஞ்சாப் , ஹரியானா இடைத்தரகர்கள் இதுநாள் வரையில் விவசாயிகளிடம் கொள்ளை அடித்ததற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். இவர்களுக்கு துணைபோன காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும். .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202004:25:37 IST Report Abuse
J.V. Iyer பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் கட்சி பாஜக மட்டும்தான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-டிச-202004:24:40 IST Report Abuse
J.V. Iyer அ.ம.மு.க.தினகரனுக்கு வேறு வேலை இல்லை. எதாவது குருட்டுத்தனமாக கூவிவைக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X