சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜட்டி மட்டும் அணிந்த கொள்ளையர்கள் - ஆசிரியை வீட்டில் 37 சவரன் பறிப்பு

Added : டிச 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
செஞ்சி: ஜட்டி மட்டும் அணிந்த முகமூடி கொள்ளையர்கள் ஆசிரியை வீடு புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, 37 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் சகாயராஜ், 53; இவரது மனைவி வசந்தி, 41; அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மகள் சரண்யா ஜோஷி, 15; மகன் உள்ளனர். விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள இவர்களது வீட்டு மாடியில்,
ஜட்டி மட்டும் அணிந்த கொள்ளையர்கள் - ஆசிரியை வீட்டில் 37 சவரன் பறிப்பு

செஞ்சி: ஜட்டி மட்டும் அணிந்த முகமூடி கொள்ளையர்கள் ஆசிரியை வீடு புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி, 37 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கூட்ரோட்டைச் சேர்ந்தவர் சகாயராஜ், 53; இவரது மனைவி வசந்தி, 41; அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மகள் சரண்யா ஜோஷி, 15; மகன் உள்ளனர். விவசாய நிலத்திற்கு மத்தியில் உள்ள இவர்களது வீட்டு மாடியில், தனியார் பள்ளி முதல்வர் மேரிசார்லஸ், 64; வாடகைக்கு வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:20 மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டு மேரிசார்லஸ் ஜன்னல் வழியாக பார்த்தார். ஜட்டி மட்டும் அணிந்த முகமூடி கொள்ளையர்கள், ஐந்து பேர் நின்றிருந்தனர். கையில் கிளவுஸ் அணிந்திருந்தனர்.இதற்கிடையே, மாடியில் கதவு தட்டும் சந்தம் கேட்ட சகாயராஜ் கதவை திறந்து வெளியே வந்தார். உடன் மாடியில் இருந்த கொள்ளையர் கத்தி மற்றும் உருட்டு கட்டையுடன், சகாயராஜை மடக்கினர்.
அவரை வீட்டிற்குள் தள்ளி குடும்பத்தினரை மிரட்டி ஒரே இடத்தில் உட்கார வைத்தனர்.வசந்தி அணிந்திருந்த தாலி செயின், சரண்யா ஜோஷி அணிந்திருந்த செயின், சகாயராஜ் மோதிரம் என, 11 சவரன் நகைகளை பறித்தனர். பீரோவை திறந்து, 26 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி நகை, 10 ஆயிரம் ரூபாய், மொபைல் போனை கொள்ளை அடித்து சென்றனர்.
மேரிசார்லஸ் கொடுத்த தகவல்படி செஞ்சி போலீசார் வந்தனர். அதற்குள், முகமூடி கொள்ளையர்கள் தப்பினர். போலீசார் கொள்ளையர்களை மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
26-டிச-202007:03:15 IST Report Abuse
 Muruga Vel ஜட்டி அணிந்த வரைக்கும் சந்தோஷம் ..அந்த காலத்தில் உடம்பு முழுக்க என்னை தடவிக்கொண்டு திருடர்கள் வருவார்கள் என்று சொல்வதுண்டு ..
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
23-டிச-202018:03:12 IST Report Abuse
vijay ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X