பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளின் போராட்டம் நிறைவு; கிராமங்களில் பிரசாரம் செய்ய முடிவு

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், விவசாயி கள் நடத்தி வந்த தொடர் காத்திருப்பு போராட்டம், நேற்று திடீரென நிறைவுக்கு வந்தது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள், டில்லியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அகில இந்திய விவசாய போராட்டக்குழு சார்பில்

ஈரோடு: ஈரோட்டில், விவசாயி கள் நடத்தி வந்த தொடர் காத்திருப்பு போராட்டம், நேற்று திடீரென நிறைவுக்கு வந்தது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள், டில்லியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அகில இந்திய விவசாய போராட்டக்குழு சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, கடந்த, 14ம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று ஐந்தாம் நாள் போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை வகித்து கூறியதாவது: அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நடந்தது. இதில் காத்திருப்பு போராட்டத்தை இன்று (நேற்று) மாலையுடன் நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. வரும், 20 முதல் கிராமங்களில் சுடர் ஏற்றி வைத்து, பல்வேறு கட்ட போராட்டம், பிரசாரம் செய்வது, துண்டு பிரசுரங்கள் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பல்வேறு கட்சியினர், அமைப்பினர், பெண்கள் நேற்று பங்கேற்றனர். முன்னதாக, வேளாண் கருவிகளை தூக்கி வைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டக்கோரி கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X