பொது செய்தி

தமிழ்நாடு

பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.6.82 லட்சம் காணிக்கை

Added : டிச 19, 2020
Share
Advertisement
கோபி: பாரியூர் கோவில் உண்டியல்களில், 6.82 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உதவி கமிஷனர் வெங்கடேஷ், செயல் அலுவலர் நாகராஜ் முன்னிலையில், தனியார் கல்லூரி மாணவியர், நுகர்வோர் அமைப்பினர் ஈடுபட்டனர். இதில் தங்கம், 80 கிராம், வெள்ளி, 147 கிராம், 6.82

கோபி: பாரியூர் கோவில் உண்டியல்களில், 6.82 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உதவி கமிஷனர் வெங்கடேஷ், செயல் அலுவலர் நாகராஜ் முன்னிலையில், தனியார் கல்லூரி மாணவியர், நுகர்வோர் அமைப்பினர் ஈடுபட்டனர். இதில் தங்கம், 80 கிராம், வெள்ளி, 147 கிராம், 6.82 லட்சம் ரூபாய் காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தியிருந்தனர். கோபி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த, பிப்.,28ல் உண்டியல் திறப்பில், 20 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 20ல் கோவில் பூட்டப்பட்டது. ஊரடங்கு தளர்வால், கடந்த செப்.,1ல் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், 109 நாட்களுக்கு பின், உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X