புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, சத்தி சாலை, ஐயப்பன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, பணம் வைத்து சிலர் சூதாடினர். தகவலின்படி புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார், அங்கு விரைந்தனர். புன்செய்புளியம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., நகர அவைத்தலைவர் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், சூதாடியவர்களை சுற்றி வளைத்தனர். பொன்னுசாமி மற்றும் குண சேகரன், ராமசாமி, சுப்பிரமணியம், கிருஷ்ணகுமார், சண்முகம், கருணாகரன், பழனிசாமி, ரமேஷ், மாதேஸ்வரன், சுப்பு சரவணன் என, 11 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE