சங்ககிரி: சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில், ஓமலூரில் இருந்து, சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை, 51 கி.மீ., தூரம், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, பேச்சுவார்த்தை கூட்டம், சங்ககிரி, பயணியர் மாளிகையில் நேற்று நடந்தது. சேலம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை வகித்தார். கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், தனி தாசில்தார் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள், சங்ககிரி, ஐவேலி ஊராட்சியில், நில உரிமையாளர்கள், 78 பேரை அழைத்து, 14 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க, பேச்சு நடத்தினர். அப்போது, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, ஒவ்வொருவருக்கும், எவ்வளவு இழப்பீடு தொகை வழங்க உள்ளனர் என்பதை தெரிவித்தனர். இக்கூட்டம், இன்றும் நடக்கும் என, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE