தமிழ்நாடு

வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை மக்களுக்கு விரைவில் காவிரி குடிநீர் கிடைக்கும்: முதல்வர் உறுதி

Added : டிச 19, 2020
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: ''வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றி தரப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடியிலும், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியிலும், 'மினி கிளினிக்'கை, முதல்வர் பழனிசாமி, நேற்று திறந்து வைத்தார்.

பனமரத்துப்பட்டி: ''வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றி தரப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடியிலும், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியிலும், 'மினி கிளினிக்'கை, முதல்வர் பழனிசாமி, நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு, 'தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்' வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றி தரப்படும். இதனால், 4 லட்சத்து, 63 ஆயிரத்து, 500 பேருக்கு குடிநீர் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில், 100 'மினி கிளினிக்' தொடங்க நடவடிக்கை எடுத்து, முதல்கட்டமாக, லத்துவாடி, கொண்டலாம்பட்டி, வாணியம்பாடி, முத்துநாயக்கன்பட்டி என, இரு நாளில், நான்கு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மீதி இடங்களில், அந்தந்த எம்.எல்.ஏ.,க்கள் தொடங்கிவைப்பர். ஏழை மக்கள் அதிக முள்ள பகுதியில், 'கிளினிக்' அமைய வேண்டும் என்ற நோக்கில், முத்துநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மேற்கு மாவட்டத்தில், 4 பள்ளி, நடுநிலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2015ல், விவசாயிகளின் கோரிக்கையால், பூலா ஏரி, வரத்து கால்வாய், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டதால், 11 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால், இப்பகுதியில், 3,000 ஏக்கரில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எல்லாயூர், சரபங்கா ஆற்றின் குறுக்கே, 2 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் கட்டித்தரப்பட்டுள்ளது. இதன்மூலம், 15 கிராம மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. பயிர் காப்பீடு திட்டம் மூலம், 4 ஆண்டுகளில், 9,200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக பயிர் காப்பீடு பெற்றுத்தந்தது தமிழக அரசுதான். நீர் மேலாண்மை திட்டம் மூலம், அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அனைத்து துறையிலும், தேசிய விருது பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், மேட்டூர் எம்.எல்.ஏ., செம்மலை, கலெக்டர் ராமன், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி, மல்லூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் பழனிவேலு, ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X