பொது செய்தி

தமிழ்நாடு

'மனம் செம்மையானால் சமூகத்தில் மாற்றம்'

Added : டிச 19, 2020
Share
Advertisement
சேலம்: ''மனம் செம்மையானால், சமூகத்தில் மாற்றம் உருவாகும்,'' என, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சுவாமிகள் பேசினார்.மனம் மன்றத்தின், 45ம் ஆண்டு விழா, சேலம், சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில், நேற்று தொடங்கியது. எக்ஸல் கல்வி குழும தலைவர் நடேசன் தலைமை வகித்தார். விழாவை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சுவாமிகள் தொடங்கிவைத்து பேசியதாவது: சில

சேலம்: ''மனம் செம்மையானால், சமூகத்தில் மாற்றம் உருவாகும்,'' என, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சுவாமிகள் பேசினார்.


மனம் மன்றத்தின், 45ம் ஆண்டு விழா, சேலம், சண்முகா மருத்துவமனை கலையரங்கத்தில், நேற்று தொடங்கியது. எக்ஸல் கல்வி குழும தலைவர் நடேசன் தலைமை வகித்தார். விழாவை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சுவாமிகள் தொடங்கிவைத்து பேசியதாவது: சில நூற்றாண்டுக்கு முன்தான், மனதை பற்றிய ஆராய்ச்சி உருவானது என்றும், அதற்கான உளவியல் துறையும் அயல்நாட்டில்தான் உள்ளது என்ற சிந்தனை, நம்மிடையே உள்ளது. கடந்த நூற்றாண்டில்தான், தாவரத்துக்கு உயிர் உள்ளதை அறிவியல் துறை கண்டுபிடித்துள்ளனர். நம் முன்னோர், 3,000 ஆண்டுக்கும் முன், தொல்காப்பியத்தில் தாவரங்கள் தொடு உணர்வு கொண்ட உயிர்கள் எனவும், மனம் என்ற ஆறாவது அம்சத்தை கொண்டவன் மனிதன் என்றும் கூறப்பட்டுள்ளது. மன இதம் உடையவன் மனிதன் என்று கூறியுள்ளனர். ஆனால், இன்று நல்ல செய்திகளை விட, வேண்டாத செய்திகளையே பார்க்கிறோம். அதற்கு மற்றவர்களை குறை சொல்கிறோம். உண்மை என்னவெனில், நாம் மாற வேண்டும். நம் மனதை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாமல் போனால், மின்வாரியத்தை திட்டுவதை விட்டுவிட்டு, அனைவரும் ஒவ்வொரு விளக்காக ஏற்றினால் இருள் அகலும். அதுபோல், நம் மனம் சுத்தமானால், சமூகத்தில் தீமை அகலும். புது வெள்ளம் பாய்ந்தோடும்போது, கழிவு அனைத்தும் அடித்துச்செல்லப்படும். அதுபோல், மனம் செம்மையானால், சமூகத்தில் மாற்றம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நடந்த, கர்நாடக இசை அரங்கம், கவிதை நூல் வெளியீடு, கலைநிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில், திரளானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X