சேலம்: பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவர், மாமனார், மாமியாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சேலம், பெரிய சீரகாபாடியை சேர்ந்த, பாலசுப்ரமணி, 64, சாந்தி, 53, தம்பதியின் மகன் குமார், 36. இவருக்கும், ரெட்டிப்பட்டியை சேர்ந்த கண்ணம்மாள் மகள் அனிதா, 22, என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண்குழந்தையை எதிர்பார்த்ததால், ஏமாற்றமடைந்த கணவர், மாமனார், மாமியார், அனிதாவை மனதளவில் துன்புறுத்தினர். இதில், விரக்தியடைந்த அனிதா, 2014 ஏப்., 4ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆட்டையாம்பட்டி போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக, மூவர் மீதும் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, கணவர் குமாருக்கு ஏழு ஆண்டு சிறை, மாமனார் பாலசுப்ரமணி, மாமியார் சாந்தி ஆகியோருக்கு, 5 ஆண்டு சிறை, மூவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ராமஜெயம் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE