அரூர்: தர்மபுரி மாவட்டம், கொண்டகரஅள்ளி திட்டப்பகுதியில், 280 அடுக்குமாடி குடியிருப்புகள், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா நம்பிப்பட்டி, 420, அரூர் டவுன் பஞ்., அம்பேத்கர் நகர் மற்றும் பீச்சான்கொட்டாயில், 1,416 என, மொத்தம், 2,116 அடுக்கு மாடி குடியிருப்புகள், 172.94 கோடி ரூபாய் மதிப்பில், கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கட்டுமான பணியை துவக்கி வைத்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், தகுதியுடைய அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆணைக்கிணங்க, தர்மபுரி மாவட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் வாயிலாக, 381.31 கோடி ரூபாய் மதிப்பில், 6,252 குடும்பங்கள் பயனடைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, துவக்கி வைக்கப்பட்டுள்ள கட்டடப்பணிகள், 18 மாதத்தில் நிறைவு பெற்ற பின், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், சப்-கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE