அரூர்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாகவும், வழக்கை முறையாக விசாரிக்க கோரி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் தங்கம், 19. இவர், அரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், சுகாதார ஆய்வாளராக இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த மாதம், 1ல், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தங்கத்தின் சடலம் மிதந்தது. இது குறித்து, அரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தன் மகன் சாவில் மர்மம் உள்ளது; அவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டுள்ளார். எனவே, வழக்கை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், நேற்று தங்கத்தின் தந்தை ராதாகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் காலை, 11:30 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், அரூர் தாசில்தார் செல்வகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அலுவலகத்தில் மனு அளித்து விட்டு, 12:30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE