ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள, உனிசெட்டி மாரியம்மன் கோவில் உண்டியல் பணம் மற்றும் பஞ்., அலுவலகத்தில் இருந்த பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளியில், பழமையான உனிசெட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றனர். அதேபோல், கண்டகானப்பள்ளியில் உள்ள பஞ்., அலுவலகத்தின் பூட்டை உடைத்து, லேப்டாப், கம்ப்யூட்டர், பிரின்டர் ஆகியவற்றையும், மர்ம நபர்கள் திருடியுள்ளனர். கோவிலில் இருந்த உண்டியலில், ஒரு லட்சம் ரூபாய் வரை காணிக்கை பணம் இருந்ததாக, அப்பகுதி பக்தர்கள் கூறினர். நேற்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி சீனிவாசன், திருட்டு நடந்தது குறித்து, பக்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். தேன்கனிக்கோட்டை போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன், தடயங்கள் உள்ளதா என, சோதனை செய்தனர். உனிசெட்டி மாரியம்மன் கோவிலில், கடந்த மூன்று ஆண்டுகளில், ஐந்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. ஆறாவது முறையாக, நேற்றும் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE