கிருஷ்ணகிரி: கடந்த ஒரு மாதமாக, குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி பஞ்., தொன்னைகான் கொட்டாயில், சாலையோரத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து, ஒரு மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. சாலையில் குடிநீர் குளம் போல் தேங்குவதால், சாலை சேதமடைந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இங்கு குடிநீர் சாக்கடையில் வீணாகி வருவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், குழாய் உடைப்பை உடனே சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE