கிருஷ்ணகிரி: 'ஸ்டாலினை முதல்வராக்க, பாடுபட வேண்டும்' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. கிருஷ்ணகிரி பழையபேட்டையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அன்வர் பாஷா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மத் அப்துல் பாருக் வரவேற்றார். தேசிய இணை செயலாளர் அப்பதுல் பாசித், முஸ்லிம் யூத்லீக் மாநில தலைவர் முஹம்மத் யூனுஸ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தமிழக முதல்வராக்க பாடுபட வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE