கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டசபை தொகுதி, மத்தூர் ஒன்றியம் மாடரஹள்ளியில், அம்மா கிளினிக் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., முனுசாமி, அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, 50 அம்மா கிளினிக்குகள் துவங்கப்பட உள்ளன. அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு பணியாளர் இடம் பெறுவர். இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனைக்கான சிகிச்சை, இ.சி.ஜி.,கருவி, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் தெர்மா மீட்டர் உள்பட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. காலை, 8:00 முதல் பிற்பகல், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல் இரவு, 7:00 மணி வரையும் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE