பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா, வளைகுடா நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி 30 சதவீதமாக உயர்வு

Added : டிச 19, 2020
Share
Advertisement
ஈரோடு: கொரோனா பரவலுக்குப்பின், அமெரிக்கா, பங்களாதேஷ், வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு, மஞ்சள் ஏற்றுமதியாகிறது. 5 முதல் 10 சதவீதமாக இருந்த ஏற்றுமதி, 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கொரோனா பரவலின்போது, மஞ்சள் தேவை அதிகரித்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலையில்

ஈரோடு: கொரோனா பரவலுக்குப்பின், அமெரிக்கா, பங்களாதேஷ், வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு, மஞ்சள் ஏற்றுமதியாகிறது. 5 முதல் 10 சதவீதமாக இருந்த ஏற்றுமதி, 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கொரோனா பரவலின்போது, மஞ்சள் தேவை அதிகரித்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலையில் பெரிய மாற்றமில்லை. தற்போது ஈரோட்டில், விரலி குவிண்டால், 5,159 ரூபாய் முதல், 6,059 ரூபாய், கிழங்கு குவிண்டால், 4,659 ரூபாய் முதல், 5,739 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரோடு விதை மஞ்சள், வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால், அவர்கள் தரமான மஞ்சளை உற்பத்தி செய்கின்றனர். மஹாராஷ்டிராவில் நம்மைவிட குவிண்டாலுக்கு, 500 ரூபாய் குறைவாக கிடைப்பதால், அவர்களிடம் பலர் வாங்குகின்றனர். வட மாநிலங்களில் குளிர்பதன கிடங்கு அதிகமாக உள்ளதால், தரம் மாறாமல் பதப்படுத்தி விற்கின்றனர். தமிழகத்தில் குளிர்பதன கிடங்கு வசதி மிகமிகக்குறைவு. இதனால் ஈரோடு உட்பட தமிழகத்தில் மஞ்சளின் தேவை குறைந்து, விலையும் உயராமல் உள்ளது. அதேநேரம், இலங்கையில் சாகுபடியில் தன்னிறைவு பெறுவதற்காக, இந்திய மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், ஈரோடு பகுதியில் இருந்து ஆண்டுக்கு, 7,000 டன் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கொரோனா பரவலுக்குப்பின், அமெரிக்கா, பங்களாதேஷ், வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு, மஞ்சள் ஏற்றுமதியாகிறது. முன், 5 முதல் 10 சதவீதமாக இருந்தது. தற்போது, 30 சதவீதமாக ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X