கிருஷ்ணகிரி: ''லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் தினமும், 5,000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும்,'' என, மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில், மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குறித்த, ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர், திருப்பத்தூர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ், மாநில துணைத் தலைவர் பரமத்திவேலூர் ராஜூ ஆகியோர் பேசினர்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 27 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். தமிழக அரசு, 12 நிறுவன வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. 2,000 ரூபாய்க்கு கிடைத்த, வேகக்கட்டுப்பாட்டு கருவி தற்போது, 7,000 முதல், 8,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். வேகக்கட்டுப்பாட்டு கருவியை, 49 கம்பெனிகளில் வாங்கிக் கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை, தமிழக அரசு அமல்படுத்தவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தால் தினமும், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணகிரி தலைவர் முருகேசன், செயலாளர் தண்டபாணி, சட்ட ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE